வழிபாடு

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2022-06-18 03:48 GMT   |   Update On 2022-06-18 03:48 GMT
  • விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் ஏழைப் பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், மாவடி பிள்ளையார், நீலா மேலவீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகர், வேதாரண்யம் கற்பகவிநாயகர், கட்சுவான் முனிஸ்வரர்சுவாமி கோவிலில் உள்ள விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

Similar News