வழிபாடு

சங்கிலி கருப்பராயன் கோவிலில் ஆடிப்பெருவிழா- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Published On 2022-08-11 11:01 IST   |   Update On 2022-08-11 11:01:00 IST
  • இன்று (வியாழக்கிழமை) ஆடி மாதம் பவுர்ணமி பூஜை நடக்கிறது.
  • நாளை (வெள்ளிக்கிழமை) சுவாமிக்கு சிறப்பு பூஜை, தாலாட்டு பூஜை நடைபெறுகிறது.

கோவை-தடாகம் சாலையில் லாலி ரோடு சந்திப்பில் பழைமையான சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 18-ம் ஆண்டு ஆடிப்பெருவிழா கடந்த 1-ந் தேதி முகூர்த்த கால்நடப்பட்டு, சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பக்தர்களால் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 108 ஆடுகள் சாமிக்கு பலியிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு கருப்புராயன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மறுபூஜை படையல் செய்து 5000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (வியாழக்கிழமை) ஆடி மாதம் பவுர்ணமி பூஜை நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) சுவாமிக்கு சிறப்பு பூஜை, தாலாட்டு பூஜை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News