வழிபாடு

புதுக்குடியிருப்பு புனித ஆரோக்கிய நாதர் ஆலய குடும்ப விழா நாளை தொடங்குகிறது

Update: 2022-08-11 05:36 GMT
  • இந்த திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
  • 20-ந்தேதி இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்பவனி ஆகியவை நடக்கிறது.

நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புனித ஆரோக்கியநாதர் ஆலய குடும்ப விழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நவநாள் நடக்கிறது. தொடர்ந்து ஜோசப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கிளாட்சன் தலைமை தாங்கி திருவிழா கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் எடிசன் மறையுரையாற்றுகிறார்.

தொடர்ந்து விழா நாட்களில் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி, இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவில் 14-ந்தேதி காலை 8 மணிக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் பெஸ்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், 15-ந்தேதி இரவு 9 மணிக்கு அன்னை மரியாவின் தேர்பவனி, 20-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்பவனி ஆகியவை நடக்கிறது.

21-ந்தேதி காலை 8 மணிக்கு மறைமாவட்ட பள்ளிகள் கண்காணிப்பாளர் பெனிட்டோ தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் 2 மணிக்கு ஆடம்பர தேர்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 8.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஆன்டணி கோமஸ் தலைமையில் பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News