வழிபாடு

தூய சகாய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2022-08-13 04:21 GMT   |   Update On 2022-08-13 04:21 GMT
  • ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை பவனி நடைபெறுகிறது.
  • 21-ந்தேதி நிறைவு திருப்பலி நடக்கிறது.

காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சகாய அன்னையின் உருவக்கொடி ஆலய வளாகத்தில் பவனியாக கொண்டு வரப்பட்டது. கொடியினை தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி அதிபர் வின்சென்ட் அமல்ராஜ் புனித நீரால் அர்ச்சித்து கொடிமரத்தில் ஏற்றினார். தொடர்ந்து பங்கு தந்தையர்கள் எட்வின் ராயன், ஜேம்ஸ் ராஜா ஆகியோர் திருவிழா திருப்பலி நிறைவேற்றினார்கள். நவ நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை பவனி நடைபெறுகிறது. இதையடுத்து கலை நிகழ்ச்சிகள், சிறப்பு திருப்பலி, அன்னையின் உருவம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு பவனி வருகிறது.

21-ந் தேதி நிறைவு திருப்பலி நடக்கிறது. திருப்பலி முடிவில் அன்னையின் கொடி இறக்கப்படுகிறது.

Tags:    

Similar News