- நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலும் மற்றும் செயலும் பஞ்சபூதங்களை சார்ந்ததாகவே இருக்கும்.
- பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுவது நீர், நிலம், காற்று, வானம் மற்றும் நெருப்பு.
பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுவது நீர், நிலம், காற்று, வானம் மற்றும் நெருப்பு. நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலும் மற்றும் செயலும் பஞ்சபூதங்களை சார்ந்ததாகவே இருக்கும். உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது பஞ்ச பூதங்களால் தான் என புராணங்களில் சொல்லப்படுகிறது.
1. நிலம்:-
குணம்- கடினமாய் இருத்தல்
செயல்-எல்லாவற்றையும் தாங்குதல்
வடிவம்-நாற்கோணம்
நிறம்-பொன்னிறம்
அடையாளம்-வஜ்ஜிராயுதம்
எழுத்து-லகர மெய்
அதிதேவன்-பிரம்மன்
2. நீர்:-
குணம்-குளிர்ச்சி
செயல்-பதம் செய்தல்
வடிவம்-பிறை
நிறம்-வெண்மை
அடையாளம்-தாமரை
எழுத்து-வகர மெய்
அதிதேவன்-திருமால்
3. நெருப்பு:-
குணம்-வெம்மை
செயல்-சுட்டு ஒன்று படுத்தல்
வடிவம்-முக்கோணம்
நிறம்-செம்மை
அடையாளம்-சுவத்தி
எழுத்து-ரகர மெய்
அதிதேவர்-உருத்திரன்.
4. காற்று:-
குணம்-அசைதல்
செயல்-பொருட்களைத் திரட்டுதல்
வடிவம்-அறுகோணம்
நிறம்-கருமை
அடையாளம்-ஆறு புள்ளி
எழுத்து-யகர மெய்
5. ஆகாயம்:-
குணம்-வெளிப்படுதல்
செயல்-இடங்கொடுத்தல்
வடிவம்-வட்டம்
நிறம்-புகை நிறம்
அடையாளம்-அமுத பிந்து
எழுத்து-அகர உயிர்
அதிதேவன்-சதாசிவன்