வழிபாடு

கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2022-12-08 08:04 GMT   |   Update On 2022-12-08 08:04 GMT
  • 17-ந்தேதி சூசையப்பர் தேர்பவனி நடக்கிறது.
  • 18-ந்தேதி மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கதேர்ப்பவனி நடக்கிறது.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 9-ந்தேதி (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து குழித்துறை மறை மாவட்ட செயலாளர் அருட்பணியாளர் ரசல்ராஜ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.

விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி நடைபெறுகிறது.

விழாவில் 17-ந் தேதி காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, வானவேடிக்கை, தொடர்ந்து சூசையப்பர் தேர்பவனி நடக்கிறது.

10-ம் நாள் திருவிழாவான 18-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கதேர்ப்பவனி நடக்கிறது.

தேர்பவனியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான இறைமக்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு கொடி இறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்கு பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணைச்செயலாளர் வினோ மற்றும் பங்கு மக்கள் பங்கு பேரவையினர், அருட் சகோதரிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News