வழிபாடு

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருவிழாவில் நாளை தேர் பவனி

Published On 2022-12-17 06:57 GMT   |   Update On 2022-12-17 06:57 GMT
  • நாளை மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தோ் பவனி நடக்கிறது.
  • இன்று இரவு சூசையப்பர் தங்கத்தேர்ப்பவனி நடக்கிறது.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குதந்தை ஆன்றனி அல்காந்தர் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடந்தது. விழாவில் நேற்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு திருச்சப்பர பவனி நடந்தது.

9-ம் நாள் விழாவான இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, மறையுரை, இரவு 9 மணிக்கு சூசையப்பர் தங்கத்தேர்ப்பவனி, 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத்திருப்பலி, மறையுரை, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தோ் பவனி, 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு சிறப்பு திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்குதந்தை ஆன்றனி அல்காந்தா், இணை பங்கு தந்தையா்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குபேரவை துணைத்தலைவா் ஜோசப், செயலா் சுமன், பொருளாளா் தீபக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News