வழிபாடு

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத் திருவிழா 28-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-01-19 05:59 GMT   |   Update On 2023-01-19 05:59 GMT
  • பிப்ரவரி 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
  • 6-ந்தேதி ஆராட்டு நடைபெறும்.

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா வருகிற 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 7.30 மணிக்கு திரு கொடியேற்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் மங்கல இசையும் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சியும் நடக்கிறது.

2-ம் திருவிழாவான 29-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் சொற் பொழிவும் ஆன்மீக சொற் பொழிவும் பக்தி இன்னிசை யும் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

3-ம் திருவிழா வான 30-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் சொற்பொழிவும் நடக்கிறது. இரவு இன்னிசை நிகழ்ச்சியும் 8.30 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

31-ந்தேதி காலை 7 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் அபிஷேகமும் இன்னிசை கச்சேரியையும் நடைபெறும்.இரவு 8 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு கமல வாக னத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

5-ம் திருவிழாவான அடுத்த மாதம் 1-ந்தேதி அதிகாலை 5.15 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் முளைப்பாரி பூஜையும் பக்தி இன்னிசையும் வீணை கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சி நடக்கிறது.

6-ம் திருவிழாவான 2-ந்தேதி அதிகாலை 5:15 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருள் நிகழ்ச்சி யும் சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் சொற்பொழிவு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

7-ம் திருவிழா வான 3-ந்தேதி காலை 5.15 மணிக்கு பல்லக்கில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் ஸ்ரீநாகராஜா சன்னதி சிறப்பு அபிஷேகமும் ஸ்ரீ அனந்த கிருஷ்ணன் சன்னதி சிறப்பு அபிஷேகமும் பக்தி இன்னிசையும் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

8-ம் திருவிழாவான 4-ந்தேதி ஸ்ரீ நாகராஜா சன்னதியில் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் சொல் அரங்கம் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

9-ம் திருவிழாவான 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகர மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. மாநகராட்சி ஆணை யர் ஆனந்தமோகன், கவுன் சிலர்கள் ரோஸிட்டா திருமால், கலா ராணி ஆகி யோர் கலந்து கொள்கிறார்கள். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறும்.

10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் ஆன்மீக சொற் பொழிவு சொல் ரகமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நாகராஜா திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

Tags:    

Similar News