வழிபாடு

அருணாப்பேரி முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

Published On 2023-01-16 12:58 IST   |   Update On 2023-01-16 12:58:00 IST
  • நாளை இரவு அம்மன் சப்பரம் வீதிஉலா நடக்கிறது.
  • புதன்கிழமை பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொடியேற்றத்தன்று மகா யாகசாலை பூஜையும், காலை 10 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.

தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றன. அம்மன் சப்பரமானது மகிழ்வண்ணநாதபுரம், பெத்தநாடார்பட்டி, பொட்டலூர், நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், நாகல்குளம் ஆகிய ஊர்களுக்கு வீதிஉலா சென்று வரும்.

வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு அம்மன் சப்பரம் வீதிஉலாவும், சப்பரம் கோவில் வந்தடைந்த உடன் மறுநாள் (புதன்கிழமை) அதிகாலையில் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News