வழிபாடு

கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு விற்பனை தொடங்கியது

Published On 2022-11-05 06:17 GMT   |   Update On 2022-11-05 06:17 GMT
  • முதல் கட்டமாக திருப்பதியில் இருந்து 3 ஆயிரம் லட்டுகள் கொண்டு வரப்பட்டன.
  • முதல் கட்டமாக திருப்பதியில் இருந்து 3 ஆயிரம் லட்டுகள் கொண்டு வரப்பட்டன.

கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோவிலில் லட்டு வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, நேற்று முதல் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக முதல் கட்டமாக திருப்பதியில் இருந்து 3 ஆயிரம் லட்டுகள் கொண்டு வரப்பட்டன. இது தவிர 1,000 இலவச லட்டுகளும் திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்டன. கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் முதல் முறையாக லட்டு விற்பனையை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய அறங்காவலர்கள் மோகன்ராவ், ராஜேந்திரகுமார், யுவராஜ், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் திருப்பதியைப் போல் தினமும் லட்டு விற்பனை நடைபெறும் என்றும், ஒரு லட்டின் விலை ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News