வழிபாடு

கேசவன் புத்தன்துறை தூயமாசற்ற திருஇருதய அன்னை ஆலய தங்க தேர் பவனி

Published On 2022-08-29 09:58 IST   |   Update On 2022-08-29 09:58:00 IST
  • இன்று (திங்கட்கிழமை) நன்றி விழா நடைபெறுகிறது.
  • ஆயர் பென்சிகர் ஆண்டகை திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

ஈத்தாமொழி அருகே உள்ள கேசவன்புத்தன்துறை தூயமாசற்ற திருஇருதய அன்னை ஆலய தங்கத்தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் ஜெபமாலையும், திருப்பலியும், அருட்பணியாளர்களின் அருளுரையும் நடைபெற்றது.

10-ம் திருவிழாவான நேற்று காலை 11 மணிக்கு அன்னையின் தங்கத்தேர் பவனி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை எஸ்.பி.லாரன்ஸ், துணைப்பங்கு தந்தை ஏ.சகாய அருள், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.

இன்று (திங்கட்கிழமை) நன்றி விழா நடைபெறுகிறது. காலை ஆயர் பென்சிகர் ஆண்டகை திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். இதற்கு புத்தன் துறை பங்கு தந்தை எல். வில்சன் தலைமை தாங்குகிறார். பொழிக்கரை பங்கு தந்தை ஜே. ஞானசேகரன் அருளுரையாற்றுகிறார். நிகழ்ச்சியை கடல் தொழில் செய்வோர் மற்றும் திருவழிபாட்டுக்குழுவினர் சிறப்பிக்கின்றனர்.

Tags:    

Similar News