வழிபாடு

வடக்குகோணம் புனித அன்னாள் ஆலய குடும்ப விழா இன்று தொடங்குகிறது

Published On 2022-08-12 11:22 IST   |   Update On 2022-08-12 11:22:00 IST
  • இன்று தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
  • 20-ந்தேதி இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

நாகர்கோவில் வடக்குகோணம் புனித அன்னாள் ஆலய குடும்பவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதன்படி விழாவில் நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, அதைதொடர்ந்து கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். இரவு 8.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், உணவுத்திருவிழா ஆகியவை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவில் 20-ந்தேதி காலை 7.30 மணிக்கு பார்வதிபுரம் அருட்பணியாளர் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. ஆசாரிபள்ளம் அருட்பணியாளர் அருள்ஜோசப் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

21-ந்தேதி காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட பொருளாளர் அலாய்சியஸ் மரிய பென்சிகர் தலைமை தாங்கி திருவிழா திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஜோசப் காலின்ஸ் தலைமையில் அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News