வழிபாடு

வேத தத்துவ தரிசனங்கள்

Published On 2023-03-31 14:56 IST   |   Update On 2023-03-31 14:56:00 IST
  • தரிசனங்கள், ஆறு வகைகளாக உள்ளன.
  • ஆறு வேத தரிசனங்களும் அவற்றின் நிறுவனர்களும் வருமாறு:-

வேத தத்துவ தரிசனங்கள் எனப்படுபவை, வேதங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவ நோக்குகள் ஆகும். விஷயங்களை நோக்கும் வழிகள் எனப் பொருள்படும் தரிசனங்கள், ஆறு வகைகளாக உள்ளன. இவற்றை, உண்மைப் பொருள் பற்றிய ஆறு விதமான விளக்கங்கள் என்றும் கூறலாம். இவை ஒவ்வொன்றும், பல்வேறு காலப் பகுதிகளில் எழுதப்பட்டவை. அதே சமயம் வேதப் பகுதிகளில் சிதறிக்கிடக்கும் கருத்துக்களை, தங்களுக்கே உரிய முறைகளில் ஒழுங்குபடுத்தியும், ஒருமுகப்படுத்தியும் தருகின்றன. இந்த ஒவ்வொரு பிரிவையும் நிறுவியவர்களாக அறியப்படும் ரிஷிகள், இவற்றுக்குரிய சூத்திர நூல்களையும் இயற்றியுள்ளார்கள். ஆறு வேத தரிசனங்களும் அவற்றின் நிறுவனர்களும் வருமாறு:-

1. நியாயம் - கவுதமர்

2. வைசேடிகம் - கணாதர்

3. சாங்கியம் - கபிலர்

4. யோகம் - பதஞ்சலி

5. மீமாம்சை (பூர்வ மீமாம்சை) - ஜைமினி

6. வேதாந்தம் (உத்தர மீமாம்சை) - பாதராயனர்

இவற்றுக்கு இடையிலான ஒற்றுமைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆறு தரிசனங்களும், இரண்டிரண்டாகச் சேர்த்து மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

1. நியாயம் - வைசேடிகம்

2. சாங்கியம் - யோகம்

3. மீமாம்சை - வேதாந்தம்

Similar News