வழிபாடு
தஞ்சை மூலை அனுமார் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா 23-ந்தேதி நடக்கிறது
- அனுமனுக்கு என்று கொடிமரத்துடன் கூடிய தனிப்பெரும் கோவிலாக திகழ்கிறது.
- லட்ச ராம நாம ஜெபம், 18 வகையான அபிஷேகம் நடக்கிறது.
தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் உள்ளது. இக்கோவிலை தஞ்சை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்மன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அனுமனுக்கு என்று கொடிமரத்துடன் கூடிய தனிப்பெரும் கோவிலாக இக்கோவில் திகழ்கிறது. இங்கு மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உள்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. இதை முன்னிட்டு லட்ச ராம நாம ஜெபம், 18 வகையான அபிஷேகம், வீதி உலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகிறார்கள்.