வழிபாடு

சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் கெங்கையம்மன். பக்தர்கள் பால் கம்பத்தை கோவில் வளாகத்தில் எடுத்துச் செல்லும் காட்சி.

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் சிரசு விழா: பால் கம்பம் நடப்பட்டது

Published On 2023-03-28 07:02 GMT   |   Update On 2023-03-28 07:02 GMT
  • சிரசு விழா மே 15-ந் தேதி நடக்கிறது.
  • அம்மனுக்கு காப்பு கட்டுதல் ஏப்ரல் 30-ந் தேதி நடக்கிறது.

தமிழகத்தில் மிகவும் பிரபலமான திருவிழாக்களில் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா முக்கியமான ஒன்றாகும். கெங்கையம்மன் கோவில் சிரசு விழா வருகிற மே மாதம் 15-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு கோவிலில் பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

முன்னதாக மூலவருக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பால் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து பால் கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பால் ஊற்றினர்.

நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ந.அசோகன், குடியாத்தம் நகர மன்றத் தலைவர் எஸ்.சவுந்தரராசன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் எஸ்.மகேந்திரன், நகர மன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் தேவகி கார்த்திகேயன், ஆட்டோ மோகன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், தர்மகத்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக் குழு தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்பட முன்னாள் அறங்காவலர்கள், திருப்பணி கமிட்டியினர், கோபாலபுரம் பொதுமக்கள், விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு காப்பு கட்டுதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ந் தேதி நடக்கிறது. மே மாதம் 14-ந் தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News