வழிபாடு

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

Update: 2022-11-28 07:02 GMT
  • பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது.
  • பக்தர்கள் காத்திருக்கும் வைகுண்ட காம்ப்ளக்ஸ்கள் நிரம்பி வரிசையில் காத்திருக்கின்றனர்.

திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் திங்கட்கிழமை வரை காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் இன்னும் தரிசனம் கிடைக்காமல் இன்று வரை தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர்.

பக்தர்கள் காத்திருக்கும் வைகுண்ட காம்ப்ளக்ஸ்கள் நிரம்பி வரிசையில் காத்திருக்கின்றனர்.

இலவச தரிசனத்துக்கு டோக்கன்கள் பெறாதவா்கள் 30 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள் 3 முதல் 4 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அங்கு டோக்கன் வாங்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

திருப்பதியில் நேற்று 73,831 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34,443 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.2 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.

Tags:    

Similar News