வழிபாடு

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது

Published On 2022-11-28 07:24 GMT   |   Update On 2022-11-28 07:24 GMT
  • டிசம்பர் 16-ந் தேதி நாரி பூஜை நடைபெறும்.
  • 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் பொங்கல் வழிபாடு சிறப்பானதாகும். இந்த ஆண்டின் பொங்கல் வழிபாடு குறித்து கோவிலில் முக்கிய பூசாரி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி கூறியதாவது:-

நடப்பாண்டின் பொங்கல் வழிபாட்டு திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் சிறப்பு பூஜைகள் நடைபெறும். காலை 10.30 மணிக்கு பொங்கல் வழிபாடு ஆரம்பமாகும். அதை தொடர்ந்து நிவேத்தியம் மற்றும் பிரசாத வினியோகம் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு உச்ச தீபாராதனை, மற்றும் அபிஷேகம், 6.30 மணிக்கு திருக்கார்த்திகை விளக்கு மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெறும்.

டிசம்பர் 16-ந் தேதி நாரி பூஜை நடைபெறும். அன்று முதல் 27-ந் தேதி வரை 12 நோன்பு திருவிழா நடைபெறும் இந்த நாட்களில் பெண் பக்தர்கள் விரதம் இருந்து இரு முடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். டிசம்பர் 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறும். 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News