வழிபாடு

பிரம்மோற்சவம் 4-வது நாள்: கல்ப விருட்ச, சர்வ பூபால வாகனங்களில் கல்யாண வெங்கடேஸ்வரர் வீதிஉலா

Published On 2023-02-15 05:12 GMT   |   Update On 2023-02-15 05:12 GMT
  • இன்று இரவு சிறப்பு கருட வாகனசேவை நடைபெறும்.
  • கோவிலில் சிறப்பு மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் கல்ப விருட்ச வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாகன வீதி உலாவுக்கு முன்னால் நடன கலைஞர்களின் கோலாட்டம் நடந்தது. பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை சர்வ பூபாலை வாகன வீதிஉலா நடந்தது. வீதிஉலாவில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

5-வது நாளான இன்று (புதன்கிழமை) இரவு சிறப்பு கருட வாகனசேவை நடைபெறும். இரவு 7 மணி முதல் 9 மணி வரை சுவாமி கருடவாகனத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். இதற்காக கோவிலில் சிறப்பு மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்கு திருப்பதியில் உள்ள தேவஸ்தன நிர்வாகக் கட்டிடத்தில் இருந்து திருமலை லட்சுமி ஹாரம் கருடசேவையில் சுவாமியை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். காலை 7 மணிக்கு கோவிந்தராஜசுவாமி கோவிலில் இருந்து ஆண்டாள் அம்மனுக்கு மாலை அணிவித்தல் ஊர்வலம் தொடங்குகிறது. பகல் 11 மணிக்கு நகர வீதிகள் வழியாக சீனிவாசமங்காபுரத்தை ஊர்வலம் சென்றடையும்.

Tags:    

Similar News