வழிபாடு

நாகூர் கடற்கரையில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட காட்சி.

நாகூரில் இன்று பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

Published On 2022-07-09 05:01 GMT   |   Update On 2022-07-09 11:20 GMT
  • நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
  • தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது

நாகப்பட்டினம் :

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, நாகை மாவட்டம் நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இதேப்போல் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News