வழிபாடு

மன அமைதிக்கு உச்சரிக்க வேண்டிய மந்திரம் எது?

Published On 2023-07-25 07:25 GMT   |   Update On 2023-07-25 07:25 GMT
  • அருணகிரி நாதரின் இந்த இரண்டு பாடல்களை நாள்தோறும் பாராயணம் செய்யுங்கள்
  • அருணகிரிநாதரின் அந்தப் பாடல்கள்:-

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது; அவர் தினந்தோறும் பூஜையில் சொன்னது; "அருணகிரி நாதரின் இந்த இரண்டு பாடல்களை நாள்தோறும் பாராயணம் செய்யுங்கள்! மன சஞ்சலம் தீரும்! அமைதியை அருள்வார் ஆறுமுகன்" என்பார். அருணகிரிநாதரின் அந்தப் பாடல்கள்:-

1)எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ!

சிந்தாகுலம் ஆனவை தீர்த்தெனையாள்!

கந்தா! கதிர் வேலவனே! உமையாள்

மைந்தா! குமரா! மறை நாயகனே! (கந்தர் அனுபூதி)

2)அதிருங்கழல் பணிந்துன் அடியேனும்

அபயம் புகுவதென்று நிலை காண

இதயந் தனிலிருந்து க்ருபையாகி

இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!

எதிரங்கொருவர் இன்றி நடமாடும்

இறைவன் தனது பங்கின் உமை பாலா!

பதியெங்கிலும் இருந்து விளையாடி

பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே - திருப்புகழ்

(இதயந்தனில் இருந்து கிருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே-என்று நிறைவு செய்யவும்)

Tags:    

Similar News