வழிபாடு

ஆடிப்பூரத்தை முன்னிட்டு வடிவுடையம்மனுக்கு நாளை வளைகாப்பு

Published On 2022-07-30 08:40 GMT   |   Update On 2022-07-30 08:40 GMT
  • மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் இன்று ஆடிப்பூரம் நிகழ்ச்சிகள் தொடக்கம்
  • வடிவுடையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது.

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி நாளை (31-ந்தேதி) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி வடிவுடையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. கோவில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து வசந்த மண்டபத்தில் வடிவுடையம்மன் எழுந்தருள்வாள்.

அம்மனுக்கு முளை கட்டிய பயிர்கள், மற்றும் திண்பண்டங்களை வயிற்றில் கட்டி விட்டு வளைகாப்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் நிகழ்ச்சிகள் இன்று காலை தொடங்கியது. காலை 8.30 மணிக்கு 1008 கலச ஸ்தாபிதத்துடன் விழா தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு யாகசாலை வளர்த்து முதல் கால பூஜை ஆரம்பமாகிறது. நாளை காலை 8.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால பூஜையும் நடக்கிறது.

ஆடிப்பூரமான வருகிற 1-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கோபூஜை நடக்கிறது. அதைத் தொடர்ந்து 4-ம் கால பூஜை, விசேஷ ஹோமம், மகா சங்கல்பம் நடைபெற உள்ளது. பின்னர் மகாபூர்ணா ஹுதியுடன் யாக சாலை பூஜை நிறைவு பெறும். அதன் பிறகு கலச புறப்பாடு நடைபெறும்.

பின்னர் காமாட்சி அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு புஷ்ப அலங்கார பல்லக்கில் காமாட்சி அம்மன் மாட வீதி உலா நடைபெறும்.

Tags:    

Similar News