வழிபாடு

ஆடி அமாவாசை: தர்ப்பணத்தில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்...

Published On 2025-07-24 08:38 IST   |   Update On 2025-07-24 08:38:00 IST
  • பிரயோகம் - ஆசமனம் செய்யும் போது கையில் பவித்திரமிருக்கக் கூடாது.
  • சங்கல்பம் முடிந்ததும் தர்ப்பைகளைத் தெற்கு திக்கில் போட்டு விட வேண்டும்.

தந்தை இறந்த ஆண்டில் தர்ப்பணம் செய்ய வேண்டாம். ஆனால், அந்த ஆண்டு பூர்த்தியாவதற்குள் கிரகணம் வந்தால் கிரகண புண்ணியகாலத்தில் தர்ப்பணம் செய்து விட்டுப் பின்பு அமாவாசைகளில் செய்ய வேண்டும்.

நடுப்பகலுக்கு மேல் தர்ப்பணத்திற்காக ஒரு நீராடல் செய்து விட்டு மாத்யான்ஹிகத்திற்குப் பின் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதுவரை பட்டினியாயிருக்க வேண்டும். துணிகளை கட்டிக் கொண்டு தர்ப்பணம் செய்யக் கூடாது.

1. பிரயோகம் - ஆசமனம் செய்யும் போது கையில் பவித்திரமிருக்கக் கூடாது. ஆசமனம் முடிந்த பின் பவித்திரத்தை மோதிர விரலில் அணிந்து கொண்டு அத்துடன் மூன்று தனி தர்ப்பைகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு 'சுக்லாம் பரதம்', 'பிராணாயமம்', 'சங்கல்பம்' முதலியவற்றை செய்ய வேண்டும். சங்கல்பம் முடிந்ததும் தர்ப்பைகளைத் தெற்கு திக்கில் போட்டு விட வேண்டும்.

2. ஆவாஹனம் - சுத்தமான தரையிலோ (வெள்ளி, பித்தளை, அல்லது தாமிரத் தாம்பாளத்திலோ) கிழக்கு மேற்காகப் பரப்பிய தர்ப்பைகளின் மேல் தெற்கு நுனியாகக் கூர்ச்சத்தை வைத்து 'ஆயாதபிதர' என்ற மந்திரத்தால் எள்ளைப் போட்டு ஆவாஹனம் செய்யய்ய வேண்டும்.

3. ஆஸனம் - 'ஸக்ருதாச்சின்னம்' என்ற மந்திரத்தால் தனித் தர்ப்பைகளைத் கூர்ச்சத்திற்கு கீழ் வைக்க வேண்டும். 'ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்' என்று மறுபடி எள்ளைப் போட வேண்டும்.

தர்ப்பணம் - பித்ரு தர்ப்பணத்தில் கட்டை விரலுக்கும் மற்ற நான்கு விரலுக்கும் இடையில் வலது புறமாகச் சாய்த்து கை நிறையத் தீர்த்தம் விட வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது இடது காலை முட்டி இட்டு, வலது காலை மடித்துக் கொண்டு இரண்டு கைகளையும் முழந்தாள்களுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு கிழக்கு முகமாகவோ அல்லது, தெற்கு முகமாகவோ இருக்க வேண்டும். தெற்கு முகமாகத் தர்ப்பணம் செய்பவரும் ஆசமனம், சங்கல்பம், ஆவா ஹனம், ஆஸனம் முதலியவற்றைச் செய்யும் போது கிழக்கு முகமாகத் தான் செய்ய வேண்டும்.

Tags:    

Similar News