வழிபாடு

63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்தநிலையில் காட்சி தருவது ஏன்?

Published On 2023-07-02 08:44 GMT   |   Update On 2023-07-02 08:44 GMT
  • 63 நாயன்மார்களில், காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்தநிலையில் காட்சித்தருவார்.
  • இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.

அறுபத்துமூன்று நாயன்மார்களில், காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்தநிலையில் காட்சித்தருவார். காரணம், பிரிந்து சென்ற கணவரை பாண்டிய நாட்டுக்கு அம்மையார் தேடிச்செல்லும்போது, கணவர் குடும்பத்தோடு அம்மையார் காலில் விழுந்ததும், மனம் வெதும்பிய அம்மையார், தனக்கு இந்த அழகுமேனி வேண்டாம், பேய் உருவம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டியதும், இறைவன் அம்மையார் வேண்டியபடி செய்தார்.

பேய் உருவம் தாங்கிய அம்மையார், 'அற்புத திருவந்தாதி', 'திருவிரட்டை மணிமாலை' பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார். இறைவன் இருக்கும் இடம் என்பதால், கால் வைக்க மனம் ஒப்பாமல், தலையாலேயே அம்மையார் நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார்.

அப்போது அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், 'அம்மையே அமர்க!' என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.

Tags:    

Similar News