வழிபாடு
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் தேரை சுத்தம் செய்த தீயணைப்பு வீரர்கள்

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் தேரை சுத்தம் செய்த தீயணைப்பு வீரர்கள்

Published On 2022-05-16 14:22 IST   |   Update On 2022-05-16 14:22:00 IST
உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் வருகிற 19-ந்தேதி தேரோட்டத்தை முன்னிட்டு தீயணைப்பு வீரர்கள் தேரை சுத்தம் செய்தனர்.
உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பிரம்மோற்சவ விழா நடைபெறாமல் இந்த ஆண்டு நடப்பதால் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

காந்திரோட்டில் நிலை கொண்டுள்ள தேரின் சக்கரம், ஹைட்ராலிக் பிரேக் நல்ல நிலையில் இருக்கிறதா, தேரில் வேறு ஏதாவது பழுது உள்ளதா என்று சரிபார்த்த நிலையில் தேரை சுத்தம் செய்யும் பணி நடந்தது. 73 அடி உயரமுள்ள 7 நிலைகொண்ட சிற்பங்கள் வேலைப்பாடுகள் கொண்ட இந்த தேரை சுத்தம் செய்ய தீயணைப்பு துறை உதவியுடன் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தேரை சுத்தம் செய்தனர்.

Similar News