வழிபாடு
திருவிடந்தை நித்யபெருமாள் கோவில்

திருவிடந்தை நித்யபெருமாள் கோவிலில் இன்று தெப்போற்சவம்

Published On 2022-04-25 13:25 IST   |   Update On 2022-04-25 13:25:00 IST
திருவிடந்தை நித்ய பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்ய பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று நித்திய கல்யாண பெருமாள் தேவியருடன் அலங்கார திருத்தேரில் எழுந்தருளி, ராஜ அலங்காரத்தில் மாடவீதிகளில் உலா சென்று வந்தார்.

2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விழா நடப்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று (25-ந்தேதி) இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

Similar News