வழிபாடு
தர்மராஜ சுவாமி கோவில் தேரோட்டம் முறம், துடைப்பத்தால் அடி வாங்கி ஆசிபெற்ற பக்தர்கள்

தர்மராஜ சுவாமி கோவிலில் முறம், துடைப்பத்தால் அடி வாங்கி ஆசிபெற்ற பக்தர்கள்

Published On 2022-04-22 09:12 IST   |   Update On 2022-04-22 09:12:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மராஜா சுவாமி கோவில் தேரோட்ட விழாவில் முறம், துடைப்பத்தால் பூசாரியிடம் அடி வாங்கி பக்தர்கள் ஆசிபெற்றனர்.
தர்மராஜா கோவில் தேரோட்டத்தையொட்டி பூசாரி ஒருவர், துடைப்பத்தால் பக்தர்களை அடித்து ஆசீர்வதித்த போது எடுத்த படம்
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த டீ கொத்த பள்ளி கிராமத்தில் திரவுபதி அம்மன், தர்மராஜ சுவாமி கோயில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா நேற்று மதியம் நடந்தது.

 கிராம மக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் நிலையை அடைந்தது. முன்னதாக பக்தர்களுக்கு பிடித்த பில்லி சூனியம் ஏவல் போன்றவை நீங்க கோவில் பூசாரி பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் முறம் மற்றும் துடைப்பத்தால் அடித்தபடி ஓடினார். பக்தர்கள் அவரிடம் அடி வாங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர். விழாவையொட்டி கடந்த 15&ந் தேதி இரவு தர்மராஜ சுவாமி திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் திரவுபதி அம்மனுக்கு அழகு சேவை, பச்சை கரகம், தீபாராதனை, பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News