வழிபாடு
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி நடந்த போது எடுத்த படம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி மும்முரம்

Published On 2022-03-26 09:18 IST   |   Update On 2022-03-26 09:18:00 IST
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா வருகிற 27-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு விழா வருகிற 27-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து கோபுரங்களும் புதுப்பித்தும், சிற்பங்கள் சீரமைத்தும் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குடமுழுக்கை பக்தர்கள் பார்க்கும் வகையில் கோவில் வாசல் முன்பு பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். இதில் செவிலியர்கள், மருத்துவ மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News