வழிபாடு
திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோவிலில் இன்றும் தரிசனம் செய்யலாம்.
ஆதிசங்கராச்சாரியார், அத்வைதத்தின் உண்மையை உலகத்திற்கு நிரூபிக்க விரும்பினார். அதற்காக அவர் யாத்திரையை மேற்கொண்டிருந்தார். அப்படி ஒரு தலத்திற்கு வந்தபோது, அங்கிருந்த சிவலிங்கத்தில் இருந்து ஒரு கரம் நீண்டு, ‘சத்யம் அத்வைதம்’ என்று ஆசீர்வதித்தது. சிவலிங்கத்தில் இருந்து ஒரு கரம் வெளிப்பட்ட நிலையில் இருக்கும் அந்த சிவலிங்கத்தை, திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோவிலில் இன்றும் தரிசனம் செய்யலாம். தஞ்சாவூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்.