வழிபாடு
ஸ்ரீமுஷ்ணம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் சந்தைதோப்பு அருகில் அங்காளபரமேஸ்வரி பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரி விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
விழாவில் 7-ம் நாள் உற்சவமான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. தாண்டவராய சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தேரில் எழுந்தருளினர்கள்.
பின்னர், அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. முன்னதாக, காலை 6:30 மணிக்கு தாண்டவராய சுவாமிக்கும் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.