வழிபாடு
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நிறைவு

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நிறைவு

Published On 2022-03-05 12:19 IST   |   Update On 2022-03-05 12:19:00 IST
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்ததையொட்டி பூர்ணாஹுதி, கலசாபிஷேகத்துடன் கொடியிறக்கம் நடந்தது.
திருப்பதி கபிலேஸ்வரசாமி  கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. நிறைவு நாள் காலை நடராஜசாமிக்கு ஆஸ்தானம், திரிசூலத்துக்கு ஸ்நாபன திருமஞ்சனம், திரிசூல ஸ்நானம் நடந்தது. அதன் பிறகு மூலவருக்கு பூர்ணாஹுதி, கலசாபிஷேகம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை கொடியிறக்கம் நடந்தது.

இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ராவணாசூர வாகனச் சேவை, ஆஸ்தானம் நடந்தது.

மேற்கண்ட நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், உதவி அதிகாரி சத்ரேநாயக், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரெட்டிசேகர், சீனிவாசநாயக் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

Similar News