வழிபாடு
பவளக்காளி, பச்சைக்காளி

தஞ்சையில் பச்சைக்காளி, பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சி 9-ந்தேதி நடக்கிறது

Update: 2022-03-04 06:56 GMT
வருகிற 8-ந்தேதி பச்சைக்காளி மேலராஜவீதி சங்கநாராயணர் கோவிலில் இருந்தும், பவளக்காளி கொங்கணேஸ்வரர் கோவிலில் இருந்தும் புறப்பட்டு அன்று தஞ்சை நகரம் முழுவதும் வலம் வந்து ஆசி வழங்குகிறார்கள்.
தஞ்சை வெண்ணாற்றங்கரையில் கோடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களுள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த கோவில் சோழ மன்னன் விஜயாலயனால் கட்டப்பட்டு சோழர், நாயக்கர், மராட்டியர் போன்ற மன்னர்களால் போற்றி பாதுகாக்கப்பட்டது ஆகும்.

இந்த கோவிலின் உற்சவர்களான பச்சைக்காளி, பவளக்காளி ஆகியோருக்கான திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அப்போது பூரணம், பொற்கொடியாள் அய்யனாருக்கும் காப்பு கட்டப்பட்டது.

இதையடுத்து வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பச்சைக்காளி மேலராஜவீதி சங்கநாராயணர் கோவிலில் இருந்தும், பவளக்காளி கொங்கணேஸ்வரர் கோவிலில் இருந்தும் அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு அன்று தஞ்சை நகரம் முழுவதும் வலம் வந்து ஆசி வழங்குகிறார்கள்.

9-ந்தேதி (புதன்கிழமை) மாலை பூஜைகளும், அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு பச்சைக்காளி, பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தஞ்சையில் நடைபெறும் கோவில் விழாக்களுள் பச்சைக்காளி, பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்றாகும். 10-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் மேலவீதி காளியாட்ட உற்சாவ கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News