வழிபாடு
அய்யனார்

விளையும் பயிர்களை காக்கும் தெய்வம்

Published On 2022-02-11 14:59 IST   |   Update On 2022-02-11 14:59:00 IST
அய்யனார் காவல் தெய்வம் ஆதலால் ஊர் எல்லையில் கோவில் கொண்டிருப்பார். இவர் ஊருக்குள் விரோதிகள், கள்வர்கள், கொடிய விலங்குகள், தொற்று வியாதிகள் வராமல் பாதுகாப்பார்.
அய்யனார் காவல் தெய்வம் என்றும், கிராம தேவன் என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு சாத்தன் மற்றும் சாஸ்தா ஆகிய பெயர்களும் உள்ளன. நகரங்களிலும் இவருக்கு கோவில்கள் உண்டு. காரணம், இன்றுள்ள நகரங்களும் ஒருகாலத்தில் கிராமங்களாக இருந்தவையே.

நமது தமிழ்நாட்டில் அநேகமாக எல்லா ஊர்களிலும் அய்யனார் கோவில்கள் உள்ளன. இவர் காவல் தெய்வம் ஆதலால் ஊர் எல்லையில் கோவில் கொண்டிருப்பார். இவர் ஊருக்குள் விரோதிகள், கள்வர்கள், கொடிய விலங்குகள், தொற்று வியாதிகள் வராமல் பாதுகாப்பார். வயல்களில் விளையும் பயிர்களை காப்பவரும் இவரே. இவருக்கு பாவாடை ராயன், கருப்பணசாமி, வீரபத்திரன், இடும்பன் மற்றும் வீரன் ஆகிய துணைவர்கள் உண்டு.

இவர்களும் அய்யனார் கோவிலில் வீற்றிருப்பர். பிடாரி என்று அழைக்கப்படும் பீடாபகாரி என்ற தேவதையையும் இவரது கோவிலில் காணலாம்.கிராமத்திலுள்ள அய்யனார் கோவிலுக்கு சென்றால், கோவிலின் வெளியே, திறந்த வெளியில் பெரிய அளவிலான, பல வண்ணங்கள் தீட்டப்பட்ட அய்யனார் சிலையை காணலாம். இவர் குதிரையின் மேல் சவாரி செய்வது போல் இருப்பார். பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூரில் உள்ள காருடைய அய்யனார் கோவிலும் பிரசித்திப்பெற்ற அய்யனார் கோவில்களுள் ஒன்றாகும்.

Similar News