வழிபாடு
நெல்லையப்பர் கோவிலில் தங்கவிளக்கு தீபம் ஏற்றப்பட்டது
நெல்லையப்பர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) பத்ர தீப விழா நடைபெறுகிறது. இன்று மாலையில் நந்தி தீபமும், அதைத்தொடர்ந்து 10 ஆயிரம் தீபங்களும் ஏற்றப்படுகிறது.
நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் அமாவாசையையொட்டி பத்ர தீப விழா நடைபெறும். இந்த ஆண்டு பத்ரதீப விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நெல்லையப்பர் சன்னதி மணி மண்டபத்தில் நேற்று மாலை தங்க விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்று 11 பால் குடங்கள் எடுத்து நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 11 மணிக்கு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள், உற்சவர்கள் எழுந்தருளுகிறார்கள். 308 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் தீபாராதனை, மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.
இன்று மாலையில் நந்தி தீபமும், அதைத்தொடர்ந்து 10 ஆயிரம் தீபங்களும் ஏற்றப்படுகிறது.
இரவு 8 மணிக்கு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சண்முகர் கோவில் வளாகத்தில் சோடச தீபாராதனை நடைபெறுகிறது.