வழிபாடு
திருப்பதி

திருமலையில் புரந்தரதாசர் ஆராதனை உற்சவம் 3 நாட்கள் நடக்கிறது

Published On 2022-01-31 13:49 IST   |   Update On 2022-01-31 13:49:00 IST
திருமலையில் புரந்தரதாசர் ஆராதனை உற்சவம் நிறைவு நாளான (புதன்கிழமை) திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் சுப்ரபாதம் தியானம், பக்தி பஜனைகள் ஆகியவை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையானை புகழ்ந்து ஏராளமான பக்தி கீர்த்தனைகளை பாடியவர் புரந்தரதாசர். அவரை போற்றும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் புரந்தரதாசர் ஆராதனை உற்சவத்தை நடத்தி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான புரந்தரதாசர் ஆராதனை உற்சவம் 3 நாட்கள் நடக்க உள்ளது.

அதன்படி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் தாச சாகித்திய திட்டம் சார்பில் கர்நாடக இசை மேதை புரந்தரதாசரின் ஆராதனை உற்சவம் நாளை (திங்கட்கிழமை) முதல் பிப்ரவரி மாதம் 2-ந்தேதி வரை 3 நாட்கள் திருப்பதி மற்றும் திருமலையில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தாச சாகித்ய திட்ட சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சார்யா செய்து வருகிறார்.

முதல் நாள் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திருப்பதியில் உள்ள அன்னமாச்சாரியார் கலையரங்கில் ஹரிதாச ரஞ்சனியின் பஜனை இசை நிகழ்ச்சியும், ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.

முன்னதாக இன்று காலை திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் சுப்ரபாத, தியானம், பஜனை, சங்கீர்த்தனை, புரந்தரா சங்கீர்த்தனை, பல்வேறு மடாதிபதிகளின் மங்களாசாசனங்கள் ஆகியவை நடக்கிறது.

2-வதுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அலிபிரியில் உள்ள புரந்தரதாசரின் உருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோவிலில் உள்ள வைபவ மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை கொண்டு வந்து ஆராதனை நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக புரந்தரதாசர் பாடிய பக்தி கீர்த்தனைகள் பாடப்படுகிறது.

நிறைவுநாளான (புதன்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் சுப்ரபாதம் தியானம், பக்தி பஜனைகள் ஆகியவை நடக்கிறது.

இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News