வழிபாடு
டெல்டா மாவட்ட காவிரி, கடற்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பக்தர்கள்
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து நீர்நிலைகள், காவிரிபடித்துறை, புண்ணிய தலங்களில் தை அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் 12 அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை எனும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமாக விரதம் கடைப்பிடிப்பது வழக்கம்.
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதியில் நாம் விரதமிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், தை, ஆடி, மகாளய அமாவாசை தினத்திலாவது நாம் விரதமிருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது அவசியம். அப்படி செய்தால் முன்னோர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி இன்று தை அமாவாசை என்பதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள், புண்ணிய தலங்களில் ஏராளமானோர் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து நீர்நிலைகள், காவிரிபடித்துறை, புண்ணிய தலங்களில் தை அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ய மண்டப படித்துறையில் இன்று அதிகாலை முதல் ஏராளமான மக்கள் குவிந்தனர். அங்கு வழியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் காய்கறிகள், பழங்கள் வாங்கி சென்று காவிரியில் நீராடி புஷ்ய மண்டபத்தில் உள்ள புரோகிதர்களிடம் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
பின்னர் பிண்டத்தை காவிரியில் விட்டு வணங்கி அங்கிருந்து ஐயாறப்பர் கோவிலின் தெற்கு வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டார் சன்னதியின் வாசலில் குங்கிலியம் பொடி போட்டு வணங்கி சென்று ஆட்கொண்டாருக்கு அர்ச்சனை செய்தனர். கோவிலின் உள்ளே ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தஞ்சையிலும் புதுஆற்று படித்துறையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் காலை முதல் பக்தர்கள் குளத்தின் 4 கரைகளிலும் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர். குளத்தில் கரையில் அமைந்துள்ள சோடச லிங்க சன்னதிகளில் சென்று வழிபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதிகடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது கடற்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
இறந்த மூதாதையர்களுக்கு பச்சரிசி, எள்,காய்கறி, பழங்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு ஆகிய பொருட்களை வைத்து தர்ப்பணம் கொடுத்து, பின்பு கடலில் காதோலை கருகமணி தேங்காய், வெற்றிலைபாக்கு, எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை கடலில் விட்டுபுனித நீராடினர்.
பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் புனித நீராடி திருமண கோலத்தில் உள்ள சிவபெருமானை பக்தர்கள் வழிப்பட்டனர்.
பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாககழிவறை உடைமாற்றும் அறை அடிப்படைத் தேவைகளை நகராட்சி கோடியக்கரை ஊராட்சியில் செய்திருந்தனர்பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் போலீசார் செய்திருந்தனர்.
இதேப்போல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி கடலில் சங்கமிக்கும் இடத்தில் தைஅமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் தை, ஆடி, மகாளய அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பலர் வீட்டின் மாடியிலேயே தர்ப்பணம் கொடுத்து வந்தனர். ஆனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவித்து இம்முறை தர்ப்பணம் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று பொதுமக்கள் வழக்கமான முறையில் நீர்நிலை, கடற்கரை, காவிரிபடித்துறை, புண்ணிய தலங்களில் தை அமாவாசை தர்ப்பணம் கொடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது.