வழிபாடு
பாபநாசம் கோவில் முன் படித்துறை

தை அமாவாசை: பாபநாசம் கோவில் முன் படித்துறையில் தர்ப்பணம் செய்ய தடை

Published On 2022-01-31 08:51 IST   |   Update On 2022-01-31 08:51:00 IST
இந்த ஆண்டு தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி வழங்கியபோதும் பாபநாசம் கோவில் முன்பு உள்ள சுவாமி மண்டபம் படித்துறை பகுதியில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தை அமாவாசை நாளை வருகிறது. ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று பாபநாசம் கோவில் முன்பு படித்துறையில் தாமிரபரணி ஆற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி வழங்கியபோதும் கோவில் முன்பு உள்ள சுவாமி மண்டபம் படித்துறை பகுதியில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லை எனவும், அதற்கு பதிலாக முக்கூடல் ஆறு மற்றும் பாபநாசம் கோவிலுக்கு தென்புறம் உள்ள அய்யா கோவில் முன்பும் தர்ப்பணம் கொடுத்து கொள்ளலாம் எனவும், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மற்றும் பாபநாசம் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Similar News