வழிபாடு
திருபட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பரிவேட்டை உற்சவம்

திருபட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பரிவேட்டை உற்சவம்

Published On 2022-01-29 12:01 IST   |   Update On 2022-01-29 12:01:00 IST
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக குதிரை வாகனம் இன்றி, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா சென்றார். அப்போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும், பெருமாளுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர்.
திருமங்கை நாட்டின் சிற்றரசனாக முடிசூட்டப்பட்ட திருமங்கையாழ்வார், ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிச்சென்று, சோழ மன்னனோடு போரிட்டு படைகளை விரட்டினாராம். இந்த புராண நிகழ்ச்சியை விளக்கும் வகையில் வெட்டும் குதிரை வாகனத்தில் வெங்கடேசப்பெருமாள் போலகம் பகுதியில் உள்ள அம்புத்திடலில் பரிவேட்டை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக குதிரை வாகனம் இன்றி, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா சென்றார். அப்போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும், பெருமாளுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர். வீதிஉலாவுக்கு பிறகு பெருமாள் கோவிலுக்கு திரும்பினார். தொடர்ந்து நேற்று இரவு அலர்மேலு மங்கைத்தாயார் சமேத வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் ஆண்டாளுடன் சேர்த்து வழிபாடாக சாற்றுமுறை ஆராதனைகள் நடைபெற்றன. கோவிலுக்குள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News