வழிபாடு
பூத்தேரில் அம்மன் வீதி உலா வந்தபோது எடுத்த படம். (உள்படம்:- சிறப்பு அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் )

மாசித்திருவிழாவையொட்டி கோட்டை மாரியம்மன் பூத்தேரில் வீதிஉலா

Published On 2022-01-29 04:01 GMT   |   Update On 2022-01-29 04:01 GMT
அலங்கரிக்கப்பட்ட அழகிய பூத்தேரில் வீற்றிருந்த ‌கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்களை காணிக்கையாக வழங்கினர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி திண்டுக்கல் பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திண்டுக்கல் அய்யப்பன் பூச்சொரிதல் விழாக்குழுவினர் சார்பில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அழகிய பூத்தேரில் வீற்றிருந்த ‌கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதிஉலா தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பூக்களை காணிக்கையாக வழங்கினர். அவ்வாறு பெறப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்மனுக்கு படைக்கப்பட்ட பிறகு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாக பூத்தேர் வீதிஉலாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இந்து முன்னணியினர் சிலர் பூத்தேர் வீதி உலா நடத்த வேண்டும் என கோவில் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். இதையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி அனுமதி வாங்கினர். அதன்பிறகு பூத்தேர் வீதிஉலா நடத்தப்பட்டது.
Tags:    

Similar News