வழிபாடு
தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் கூடலழகர் பெருமாள்

சாற்றுமுறை வைபவம்: தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் கூடலழகர் பெருமாள்

Published On 2022-01-24 04:50 GMT   |   Update On 2022-01-24 04:50 GMT
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வந்த வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு அடைந்ததை தொடர்ந்து நேற்று சாற்றுமுறை வைபவம் நடைபெற்றது.
மதுரை நகரில் அமைந்துள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி சிறப்புடன் நடந்து வந்தது. அனைத்து வைணவ திருத்தலங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு காலையில் நடைபெறும்.

ஆனால் இக்கோவிலில் மட்டும் மாலையில் நடத்தப்படுவது சிறப்புமிக்கதாகும். அதன்படி வைகுண்ட ஏகாதசியான 13-ம் தேதி பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளுகிறார்.

கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வந்த வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு அடைந்ததை தொடர்ந்து நேற்று சாற்றுமுறை வைபவம் நடைபெற்றது. இதையொட்டி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இன்றி சாற்றுமுறை வைபவம் நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News