தைப்பூச நிறைவு நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து தெய்வானை அம்மனை சமரசம் செய்யும் ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீரபாகுதேவராக ஓதுவார் 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை பாடினார். அப்போது வள்ளியும், தெய்வானையும் ஒருவரே, என்று விளக்கி சமரசம் செய்தார். அதன்பின்னர் கோவில் நடை திறந்து, தெய்வானை அம்மனுடன் முத்துக்குமாரசுவாமி சேர்ந்து கொள்வதுமான நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உட்பிரகாரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது.