வழிபாடு
திருச்செந்தூர் கோவில்

திருச்செந்தூர் கோவிலில் இன்று பக்தர்களின்றி நடைபெற்ற தை உத்திர வருஷாபிஷேக விழா

Published On 2022-01-22 06:51 GMT   |   Update On 2022-01-22 06:51 GMT
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாதம் உத்திர தினத்தன்று மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளாகும்.

இதையொட்டி தை உத்திரத் தினத்தன்று வருஷாபிஷேகம் நடக்கும். இந்த ஆண்டு மூலவர் பிரதிஷ்டை தினமான இன்று வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வருஷாபிஷேகம் நடைபெற்று விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

தொடர்ந்து உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை தொடர்ந்து கோவில் உட்பிர காரத்தில் சுவாமி குமரவிடங்க பெருமாள் தேவ சேனா அம்பாள் எழுந்திருப்பது நடைபெறுகிறது.

மாலை 6.45 மணிக்கு ராக்கால தீபாராதனை, 7.30 மணிக்கு ஏகாந்தம் நடக்கிறது இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்று இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்கு பின் நடை திருக்காப்பிடப்படுகிறது.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதனால் இன்று வருஷாபிஷேகம் விழாவையொட்டி கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News