வழிபாடு
முப்பந்தல் ஆலமூடு அம்மன்

முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் 25-ந்தேதி புஷ்பாபிஷேக விழா

Published On 2022-01-23 02:30 GMT   |   Update On 2022-01-22 04:48 GMT
முப்பந்தல் அருகே உள்ள ஆலமூடு அம்மன் கோவிலில் புஷ்பாபிஷேக விழா வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு புஷ்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.
முப்பந்தல் அருகே ஆலமூடு அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புஷ்பாபிஷேக விழா வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சுதர்சன ஹோமம், 7.30 மணிக்கு கலச பூஜை ஆகியவை நடக்கிறது.

8 மணிக்கு தீபாராதனை, அம்மனுக்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், 2 மணிக்கு ஊட்டுபடைப்பு, மாலை 5 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி, 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு புஷ்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை முப்பந்தல் ஆலமூடு அம்மன் அறக்கட்டளை நிர்வாகி இ.அருணாசலம் தலைமையில் பக்தர்கள் சேவா சங்கத்தினர், விழா குழுவினர் செய்துள்ளனர்
Tags:    

Similar News