ஆன்மிகம்
குரவலூர் உக்கிர நரசிம்மர் பெருமாள் கோவில்

குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-07-11 02:56 GMT   |   Update On 2021-07-11 02:56 GMT
திருவெண்காடு குரவலூர் உக்கிர நரசிம்மர் பெருமாள் கோவிலில் சாமிக்கு பால், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவெண்காடு அருகே குரவலூரில் உக்கிர நரசிம்மர் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு பால், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர் நடராஜன், தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார், அர்ச்சகர் ராஜேந்திர பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல பொறையாறு அருகே அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் வந்த அமாவாசையையொட்டி, மூலவருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News