ஆன்மிகம்
அமாவாசை: தடையை மீறி ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் நீராடிய பக்தர்கள்
தமிழக அரசு ஊரடங்கு தளர்வை படிப்படியாக குறைத்ததை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.
ராமேசுவரம்
தமிழகத்தில் தொற்று நோய் பரவல் குறைந்ததை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு தளர்வை படிப்படியாக குறைத்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில் திறக்க உத்தரவிட்டது.
அதன்படி பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். ஆனால் அங்குள்ள 22 தீர்த்தங்கள் திறக்கப்படவில்லை. கொரோனா பரவலை கருத்தில்கொண்டு அக்னி தீர்த்தக் கடலிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இன்று அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனத்தில் வந்தனர். இதனால் ரெயில், பஸ் நிலையம், கோவில் பகுதிகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
இவர்கள் தடையை மீறி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர். அதன்பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் ராமநாதசுவாமி - பர்வத வர்த்தினியை தரிசனம் செய்தனர்.
கொரோனா பரவும் ஆபத்து இருப்பதால் கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தத நிலையில் அதனையும் மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் குவிந்து நீராடியதால் அதிகமாக கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.