ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 மாதத்துக்கு பின் பிரதோஷ வழிபாட்டில் நேரடியாக பங்கேற்ற பக்தர்கள்
2 மாதங்களுக்கும் மேலாக நேரடியாக பிரதோஷ வழிபாடுகளை தரிசனம் செய்ய முடியாமல் தவித்த பக்தர்கள் நேற்று பிரதோஷ வழிபாடுகளை நேரில் கண்டு வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு தமிழ்மாதமும் 2 முறை பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும்.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வழக்கமான வழிபாடுகள் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் இல்லாமல் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்று வந்தன. சிறப்பு வழிபாடுகளை ஆன்லைன் மூலம் ஒளி பரப்பி வந்தனர்.
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதையொட்டி கடந்த 5-ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று தட்சிணாய புண்ணியகால உற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது.
பின்னர் மாலையில் ஆனிமாத பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய நந்திக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நந்திக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் கோவிலில் உள்ள மற்ற நந்திகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அங்கும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
2 மாதங்களுக்கும் மேலாக நேரடியாக பிரதோஷ வழிபாடுகளை தரிசனம் செய்ய முடியாமல் தவித்த பக்தர்கள் நேற்று பிரதோஷ வழிபாடுகளை நேரில் கண்டு வழிபட்டனர்.
அப்போது உணர்ச்சிப் பெருக்கில்” அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா” என்று விண்ணதிர கோஷம் எழுப்பினர்.
வழிபாடுகள் நிறைவு பெற்றதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் திருவிழாவை முன்னிட்டு கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் சாமி உலா நடைபெற்றதால் அதனையும் கண்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.