ஆன்மிகம்
மரக்கேடயத்தில் சாமி 3-ம் பிரகாரத்தில் வலம் வந்தபோது சாமியை பக்தர்கள் தரிசனம் செய்த காட்சி.

ராமநாதசாமி கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மரக்கேடயத்தில் வலம் வந்த சாமி

Published On 2021-07-08 09:36 IST   |   Update On 2021-07-08 09:36:00 IST
2 மாதத்திற்கு பிறகு ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரதோஷ தினமான நேற்று மரக்கேடயத்தில் சாமி 3-ம் பிரகாரத்தில் வலம் வந்தார்.
கொரோனா தொற்று குறைந்ததால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் 5-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் 2 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையிலும் 22 தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதன் எதிரொலியாக கோவிலுக்கு பக்தர்களின் வருகையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 2 மாதத்திற்கு பிறகு ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரதோஷ தினமான நேற்று மரக்கேடயத்தில் சாமி 3-ம் பிரகாரத்தில் வலம் வந்தார். அப்போது திரளான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.

Similar News