ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று தாயாருக்கு பெரியதளிகை நிகழ்ச்சி நடக்கிறது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 23-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் ரெங்கநாதருக்கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி தாயார் சன்னதி மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் சாதம் பரப்பி வைக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகளை கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதி இல்லை.