ஆன்மிகம்
நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற காட்சி

பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Published On 2021-06-08 13:00 IST   |   Update On 2021-06-08 13:00:00 IST
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷயொட்டி மாலை 4 மணிக்கு நந்தி பகவானுக்கு அரிசி, தேன், பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட 21 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது.

இதில் கொரோனா ஊடரங்கு காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.

Similar News