ஆன்மிகம்
முனீஸ்வரன்

இளந்துறை முனீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை

Published On 2021-06-07 09:35 IST   |   Update On 2021-06-07 09:35:00 IST
பிரசித்திப்பெற்ற இளந்துறை முனீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜையை ஒட்டி பேசும் முனீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முனீஸ்வரர் அருள்பாலித்தார்.
கும்பகோணம் அருகே உள்ள இளந்துறை கீர்த்திமான் ஆற்றங்கரையோரம் அரசமரத்தடியில் பேசும் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மாங்குடி, குடமங்கலம், விட்டலூர், இளந்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வருகிறது. மண்டல பூஜையை ஒட்டி பேசும் முனீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முனீஸ்வரர் அருள்பாலித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

Similar News