ஆன்மிகம்
திருப்பதியில் பக்தர்கள் இல்லாமல் நடந்த ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா( பழைய படம்)

திருப்பதியில் பக்தர்கள் இல்லாமல் நடந்த ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

Published On 2021-06-04 11:53 IST   |   Update On 2021-06-04 11:53:00 IST
திருப்பதியில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இன்று நடந்த ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப் படாமல் ஏகாந்தமாக நடந்தது.
திருப்பதி மலையில் தான் ஆஞ்சநேயர் அவதரித்தார் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் உறுதியாக கூறிவரும் நிலையில், இன்று திருப்பதியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தேவஸ்தான பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இன்று ஆஞ்சநேயரின் அவதாரத் திருநாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மலையில் ஆஞ்சநேயரின் அவதாரத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பதி மலையில் தான் ஆஞ்சநேயர் அவதரித்தார் என்று கடந்த ராம நவமி அன்று தேவஸ்தான சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா திருப்பதியில் மிகவும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று தொடங்கி 8-ந் தேதி வரை 5 நாட்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை ஆஞ்சநேயர் அவதரித்த குகையில் பால ஆஞ்சநேயர், ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனா தேவி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் பேடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.

மேலும் திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வழியில் இருக்கும் 7-வது மைல் ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

அதை தொடர்ந்து ஏழுமலையான் கோவிலில் உள்ள நாத நீராஞ்சனம் மண்டபத்தில் ஆஞ்சநேயர் தொடர்பான பல்வேறு கருத்தரங்குகள் நடந்தது.

இந்த கருத்தரங்கு 5 நாட்கள் நடக்கிறது.

இன்று நடந்த ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப் படாமல் ஏகாந்தமாக நடந்தது.

Similar News